பெஜாவர், கர்நாடகா

யோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து கர்நாடகாவின் பெஜாவர் மடாதிபதி கருத்து கூறி உள்ளார்.

நேற்று அயோத்தி வழக்கின் தீர்ப்பில் சர்ச்சைக்குரிய நிலத்தை அரசு வசம் ஒப்படைந்தத உச்சநீதிமன்றம் அங்கு ராமர் கோவில் அமைக்க உத்தரவிட்டது.   அத்துடன் இஸ்லாமியர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மசூதி அமைக்க வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் பெஜாவர் மடம் அமைந்துள்ளது.  இந்த மடாதிபதியாக விஸ்வேஸாஆ தீர்த்த சாமிஜி பொறுப்பில் உள்ளார்.  அயோத்தி தீர்ப்பு குறித்துப் பல இந்து மத தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,  அவ்வகையில் விஸ்வஸா தீர்த்த சாமிஜி கருத்ஹ்டு தெரிவித்துள்ளார்.

அவர், “இஸ்லாமியர்களுக்கும் மசூதி அமைக்கச் சரியான இடம் வழங்கப்பட வேண்டும்.  மசூதி அமைக்க  இந்துக்கள் உதவ வேண்டும்.  கோவில் அமைக்க இஸ்லாமியர்கள் உதவ வேண்டும்.  இதன் மூலம் அனைவரும் தங்கள் ஒற்றுமையைக் காட்ட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.