குஜராத்தில் அட்டூழியம்: காதலர்களை அடித்து விரட்டிய இந்துத்துவா கும்பல்

அகமதாபாத்:

லகம் முழுவதும் இன்று காதலர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாஜக ஆட்சி செய்து வரும் குஜராத்தில் காதலர்களை தடியால் அடித்து விரட்டி  உள்ளனர் பஞ்சரங்தளம் அமைப்பினர்.

இந்தியாவில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றது முதல் காதலர் தினம் கலாச்சார சீரழிவு என்று கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல இடங்களில் கையில் தாலியுடன் சென்று, காதலர்களை திருமணம் செய்யக்கூறி கட்டாயப்படுத்தி வருகின்றனர்.  காதலர்கள்மீது தாக்குதல்களும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில்,  காதலர்தினத்தை கொண்டாடும் வகையில் குஜராத்தில் உள்ள சமர்மதி ஆற்றங்கரையில் காதல் ஜோடிகள் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். இதைக்கண்ட பாஜக ஆதரவு அமைப்பான பஜ்ரங்தள்  அமைப்பினர், தடிகளை கொண்டு காதல் ஜோடி களை விரட்டியடித்தனர். இதன் காதரணமாக காதல் ஜோடிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, காதலர்களை தாக்கிய பஜ்ரங்கதள் அமைப்பை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.