ஜெய்ப்பூர்: 

ராஜஸ்தான் மாநிலத்தில் அஜ்மர் தர்கா இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும் என்று இந்துத்வா அமைப்பு ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மரில் 12ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அஜ்மர் தர்கா உள்ளது. இந்த இடத்தில்     ராமர் கோவில் கட்டப்படும் என்று சிவசேனா இந்துஸ்தான் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் தர்காவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று அஜ்மர் தர்கா நிர்வாக குழு போலீசில் மனு அளித்துள்ளது

இந்த அமைப்பை சேர்ந்த லக்கன் சிங் பன்வார் என்பவர் 5 நிமிட வீடியோ ஒன்றை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். இதில், இஸ்லாமியர்கள் மற்றும் மேற்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜியை தாக்கி பேசிய அவர், தனது நோக்கத்திற்கு ஆர்எஸ்எஸ், பஜ்ரங்தள், விஹெச்பி, சிவசேனா மற்றும் இதர இந்து அமைப்புகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த மாநிலத்தில் உதைப்பூரில் மேற்கு வங்க தொழிலாளி ஒருவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்து  கடந்த 8ம் தேதி பேரணி நடந்தது. இந்த பேரணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்ப்டடுள்ளது.

இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து பன்வார் மீது ஜெய்ப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளார். இந்த தர்காவுக்கு மத சார்பிப்பிலாமல் அனைத்து தரப்பு மக்களும் வருகை தருவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.