சுதந்திர தினத்தில் ஏலியனை வெளியிடும் நடிகர்.. ஸ்பெஷல்  தயாரிப்பு..

இசை அமைப்பாளர்கள் ஜிவி.பிரகாஷ், விஜய் ஆண்டனிக்கு பிறகு அவர்கள் பாணியில் ஹீரோ வாக நடிக்க வந்து தனக்கென ஒரு இடத்தையும் பிடித்திருக்கிறார் இசை அமைப்பாளர், பாடகர் ஹிப் ஹாப் ஆதி. இவர் நடித்த மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் படங்கள் வரவேற்பு பெற்றன. முன்னதாக இவர் யூ டியூபில் வெளி யிட்டு வந்த பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு இருந்தது. அதுதான் ஹிப்ஹாப் ஆதி சினிமாவில் துழைய காரணமாக இருந்தது. விஷால் நடித்த ஆம்பள படத்துக்கு இசை அமைத்து அதன் மூலமும் பிரபலம் ஆனார்.


ஹிப்ஹாப் ஆதி தற்போது எலியன் ஆல்பம் உருவாக்கி வருகிறார். அதாவது வருகிற சுதந்திர தினத்தன்று வெளியிடுவதற்காக ’நான் ஒரு ஏலியன்’ என்ற இசை ஆல்பம் உருவாக்கி வருகி றார். இதன்முதல் பாடல் வரும் 6ம்தேதியும் முழு ஆல்பமும் ஆகஸ்ட 15ம் தேதியும் வெளியாகிரது. இதற்காக தயாரிக்கப்பட்ட ஸ்பெஷல் டி ஷர்ட் அணிந்து ஆதி போஸ்டர் வெளியிட்டிருக்கிறார். அது நெட்டில் வைராலாகி வருகிறது.