ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹாக்கி விளையாட்டு வீரராக நடிக்கும் ‘நட்பே துணை’ படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.

‘மீசைய முறுக்கு’ திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் தனது நண்பர்களுடன் ஹிப்ஹாப் தமிழா ஆதி களமிறங்கியுள்ள திரைப்படம் ‘நட்பே துணை’.  இந்த படத்தை இயக்குநர் சுந்தர் சி தயாரிக்கின்றார். இப்படத்துக்கு கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் டி. பார்த்திபன் தேசிங்கு.

படத்தில் ஆதி  ஹாக்கி விளையாட்டு வீரராக நடிக்கிறார். விளையாட்டையும், கல்லூரி வாழ்க்கையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஆதிக்கு ஜோடியாக புதுமுக நடிகை அனகா நடித்துள்ளார்.

இவர்கள் தவிர கரு.பழனியப்பன், பாண்டியராஜன், கௌசல்யா, பிளாக் ஷிப் குழுவினர் என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.