ஹிப்ஹாப் தமிழாவின் தமிழி இசை வீடியோ…!

[embedyt] https://www.youtube.com/watch?v=V9LChBJ1-B0[/embedyt]

 

ஆம்பள திரைப்படம் மூலம் திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான ஹிப்ஹாப் தமிழா (Hiphop Tamizha) அவ்வப்போது தனது இசை மூலம் தமிழ் மொழி மற்றும் தமிழகர்களின் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு போன்றவற்றை போற்றும் விதமாக காணொளி வெளியிட்டு வருகிறார்.

இவரின் இசை காணொளி நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது .இவர் பல ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவர் வெளியிடும் வீடியோ இசை ஆல்பம் தமிழகர்களின் பண்பாடுகளை போற்றும் விதமாகவும், அதை பார்ப்பவர்களுக்கு தமிழன் என்ற உணர்வை தூண்டும் விதமாகவும் இருப்பது வழக்கம்.

தற்போது “தமிழி” என்ற இசை காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் தமிழ் மொழியின் தோற்றம் முதல் கீழடி அகழ்வாய்வு பயணம் வரை கூறியுள்ளார்.