ஹிப்ஹாப் ஆதியின் ‘நான் ஒரு ஏலியன்’ ஆல்பத்தின் முதல் சிங்கிள் “நெட்ட தொறந்தா” பாடல் வெளியீடு…!

ஹிப்ஹாப் ஆதியின் சொந்த ஆல்பம் ‘நான் ஓரு ஏலியன்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நேற்று, இந்த ஆல்பத்தின் தயாரிப்பாளர்கள் ஆல்பத்தின் முதல் சிங்கிள் “நெட்ட தொறந்தா” பாடலை வெளியிட்டனர்.

ஹிப்ஹாப் ஆதியின் முதல் ஹிப்ஹாப் பாடல் பாடியது முதல் இன்று வரை தொடர்ந்து ஆதரவளித்து வரும் “ட்ரெண்ட் மியூசிக்” நிறுவனம் தற்பொழுது இந்த பாடலையும் வெளியிட உள்ளது.

தமிழ் திரைப்படங்களில் மட்டும் இசையமைத்து வந்த ஹிப்ஹாப் ஆதி தற்பொழுது தெலுங்கு திரைப்படத் துறையிலும், தனது ஹிப் ஹாப் இசையின் மூலம் பிரபலமாகி வருகிறார்.