கடந்த 2014 ஆம் ஆண்டு கோலலம்பூரிலிருந்து பீஜிங் செல்லும் வழியில் 239 பேருடன் மாயமான மலேசியன் ஏர்லைன்ஸுக்கு சொந்தமான எம்.எச் 370 விமானத்தின் மூன்றாவது உதிரி பாகம் மொரீஷியஸ் அருகே கடந்த மே மாதம் கண்டுபிடிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இந்த துண்டு பாகம் எம்.எச் 370 விமானத்தினுடையதுதான் என்று இப்போது ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து துறை அமைச்சர் டாரன் செஸ்டர் உறுதிப்படுத்தியுள்ளார்.

mh370-debris

இதற்கு முன்பாக இரண்டு உதிரி பாகங்கள் கடந்த ஜூலை மாதம் டான்சானியா ரீ யூனியன் தீவில் கண்டறியப்பட்டது, இதே போல இதுவரை ஆறு உடைந்த துண்டுகள் எம்.எச் 370 விமானத்தினுடையதுதான் என்று உறுதிப்பட்டுத்தப்பட்டிருக்கிறது. மடகாஸ்கர் தீவருகே கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது துண்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. இதன் முடிவு இன்னும் வெளியாகவில்லை.