சென்னை:

நம்ம ஊரு சலூன் கடைகளில் சூர்யா மீசை, பேட்ட ரஜினி மீசையை ஒரம் கட்டிவிட்டு, இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தனின் ‘கடா’ மீசை அனைவரையும் ஆட்டுவிக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் விராட் கோலி , சிக்கர் தவான் மற்றும் இந்தி நடிகர் ரவீந்தர் சிங் மீசைக்குப் பிறகு அபிநந்தனின் மீசை மிகவும் பிரபல்யமாகியிருக்கிறது.

” இதுபோன்ற கைத்தடி மீசையை இந்திய விமானப்படை விமானி வைத்துக் கொள்வது தவறு இல்லை. இந்தியா முழுவதும் இனி அபிநந்தன் ஸ்டைல் தான்” என்கிறார் நடிகர் ரன்வீந்தர் சிங்கின் தனிப்பட்ட சிகை அலங்கார நிபுணர் தர்ஷன் யாவல்கர்.

அபிநந்தன் விடுதலையான பிறகு, அவரது தனித்துவமான மீசை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆனது. பொதுவாக ராணுவம் மற்றும் விமானப் படையை சேர்ந்தவர்கள் மீசை இல்லாமலேயே முகத்தை வைத்திருப்பார்கள். இது அவர்களது கலாச்சாரமாக கருதப்பட்டது. இனி படையினரும், அதிகாரிகளும் தாராளமாக மீசையை வைக்க ஆரம்பிப்பார்கள்.

நமது நாட்டில் பிரபல கொள்ளையர்களாக விளங்கிய சந்தன கடத்தல் வீரப்பன், மான்சிங், முகர்சிங் மாதவ் சிங் ஆகியோர் தங்களது வீரத்தின் அடையாளமாக மீசையை அடையாளப்படுத்தி இருந்தனர்.

தற்போது அபிநந்தனின் கடா மீசையைப் போல் வளர்க்க வேண்டும் என்ற ஆசை வீரமிக்க நம் முப்படையினர் மத்தியில் தோன்றியிருப்பது நல்ல மாற்றமே.