சசிகலா நடராஜன் கும்பலால் ஜெயலலிதா உயிருக்கு டேஞ்சர் ?

Old Gold NEWS 

கடந்த கால சம்பவங்களை திரும்பிப்பார்க்கும் போது மறக்க முடியாத பரபரப்பை உண்டாக்கிய பல அந்த கால செய்திகள் நம் நினைவுகளில் இடம்பிடித்திருக்கும். அப்படிப்பட்ட செய்திகளில் ஒன்றை தான் நாம் இங்கே பார்க்கிறோம்.

அந்த காலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்

 

சசிகலா-நடராஜனால் ஜெயலலிதா உயிருக்கு ஆபத்து?

அ.தி.மு.க வில் நடராஜனை எதிர்த்தவர்கள் இதுவரைக்கும் சசிகலாவையும் சேர்த்து போஸ்டர் போட்டதில்லை. அந்தப் பெருமையைத் தட்டிக் கொண்டு சென்றது ‘எமனுக்கு எமன்’ – புரட்சித் தலைவி பாதுகாப்பு என்ற அமைப்பு (எமன் என்பது எம். நடராஜனின் சுருக்க விளக்கம் என்பது தெரிந்ததே) . மாண்புமிகு புரட்சித் தலைவி அவர்களே, சசிகலா – நடராஜன் கொள்ளைக் கும்பலால் தங்களுடைய உயிருக்கு ஆபத்து உஷார்? உஷார்? உஷார்? என்று ஒட்டப்பட்ட போஸ்டர்கள் சென்னையில் பயங்கரமான பரபரப்பைக் கிளப்பின. பாவம் அண்ணா! தன்னுடைய உருவச்சிலைக்கு கீழே அமர்க்களமாக ஒட்டப்பட்டிருக்கும் இந்தப் போஸ்டரைப் படித்துவிட்டு அவர் என்ன நினைத்தாரோ?

’80 களின் இறுதியில் வந்த இந்த செய்தி தமிழக அரசியலில் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.