சென்னை

சென்னை மாதவரம் பேருந்து நிலையம் அருகே பிரபல ரவுடி வல்லரசு காவல்துறை என்கவுண்டரில் கொல்லப்பட்டான்.

 

சென்னை நகரின் மாதவரம் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி வல்லரசு ஆவான். சுமார் 20 வயதாகும் இவன் மீது கொலை, கொலை முயற்சி, செயின் பறிப்பு உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன. இவன் காவல்துறையினரிடம் பிடிபடாமல் தலைமறைவாக இருந்து வந்தான். இவனுடன் கதிரேசன் என்னும் 33 வயது கூட்டாளியும் 32 வயதான கார்த்திக் என்னும் கூட்டாளியும் தலைமறைவாக இருந்தனர்.

 

வல்லரசு

 

அவர்களை தேடி வந்த காவல்துறை படையினர் நேற்று அதிகாலை 4.20 மணிக்கு மாதவரம் புதிய பேருந்து நிலையம் அருகே பிடித்தனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வல்லரசு காவலர்களை வெட்டுக் கத்தி மூலம் தாக்க முயன்றுள்ளான். இதில் பொன்ராஜ் என்னும் காவலர் தலையில் காயம் ஏற்பட்டது. அதை ஒட்டி வல்லரசுவை துப்பாக்கியால் காவல்துறையினர் சுட்டனர். ஒரு குண்டு அவன் காலிலும் மற்றவை அவன் மார்பையும் தாக்கின.

 

காவல்துறையினர் வல்லரசுவை ஸ்டான்லி மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் அவன் வழியிலேயே மரணம் அடைந்து விட்டதாக தெரிவித்தனர். அவனது உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு அவன் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த துப்பாக்கி சூட்டின் போது கூட்டாளிகள் இருவரும் தப்பி விட்டனர். அவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

வல்லரசு தாக்கியதால் காயமடைந்த காவலர் பொன்ராஜ் தற்போது அப்போலோ மருத்த்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தலையில் 20 தையல்கள் போடப்பட்டுள அவரை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் மருத்துவமனைக்கு செஉன்று நலம் விசாரித்தார். வல்லரசு வின் வீட்டின் அருகே காவல்துறையினரின் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

சென்னை நகரில் கடைசியாக கடந்த 2018 ஆம் வருடம் பிரபல ரவுடியான ஆனந்தன் என்பவன் கோட்டூர்புரம் காவல்துறையினர் என்கவுண்டர் செய்து கொன்றனர். அதன் பிறகு  வல்லரசு என்கவுண்டர் மூலம் காவல்துறையினரால் தற்போது கொல்லப்பட்டுள்ளான்.