வரலாற்றில் இன்று 06.11.2016
நிகழ்வுகள்
1632 – முப்பதாண்டுப் போரில் சுவீடனின் பேரரசன் குஸ்டாவஸ் அடொல்பஸ் கொல்லப்பட்டான்.
1860 – ஆபிரகாம் லிங்கன் அமெரிக்காவின் 16வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
1913 – தென்னாபிரிக்காவில் மகாத்மா காந்தி இந்திய சுரங்கத் தொழிலாளர்களுடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்டார்.
1918 – போலந்தில் இரண்டாவது போலந்து குடியரசு அமைக்கப்பட்டது.
1935 – எட்வின் ஆம்ஸ்ட்ரோங் பண்பலை ஒலிபரப்பு பற்றிய ஆய்வை வெளியிட்டார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: ரஷ்யா உக்ரேனின் கீவ் நகரைக் கைப்பற்றினர். 
1944 – புளூட்டோனியம் முதற்தடவையாக உருவாக்கப்பட்டது. 
1963 – வியட்நாம்இராணுவப் புரட்சியை, இராணுவத் தலைவர் டோங் வான் மின் வியட்நாமின் அதிபர்.
1977 – ஐக்கிய அமெரிக்காவின் ஜோர்ஜியாவில் அணைக்கட்டு ஒன்று இடிந்ததில் 39 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1861 – ஜேம்ஸ் நெய்ஸ்மித், கூடைப்பந்து கண்டுபிடிப்பாளர் (இ. 1939)
1979 – லமார் ஓடம், அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர்
இறப்புகள்
1893 – பீட்டர் சாய்க்கோவ்ஸ்கி, ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1840)
சிறப்பு நாள்
டொமினிக்கன் குடியரசு – அரசியலமைப்பு நாள் (1844)
தஜிகிஸ்தான் – அரசியலமைப்பு நாள் (1994)