வரலாற்றில் இன்று – 07.11.2016

--

வரலாற்றில் இன்று – 07.11.2016

நிகழ்வுகள்

1502 – கொலம்பஸ் ஹொண்டூராஸ் கரையை அடைந்தார்.

1665 – உலகின் பழமையானதும் இப்போதும் வெளிவரும் The London Gazette முதலாவது இதழ் வெளியானது

1910 – உலகின் முதலாவது விமானத் தபால் சேவை ரைட் சகோதரர்களால் ஒகையோவில் ஆரம்பம்

1917 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து காசாப் பகுதியைக் கைப்பற்றின.

1931 – மா சே துங் சீன சோவியத் குடியரசை அக்டோபர் புரட்சியின் நினைவு நாளில் அறிவித்தார்.

1941 – இரண்டாம் உலகப் போர்: “ஆர்மேனியா” என்ற சோவியத் மருத்துவக் கப்பல் ஜேர்மனிய விமானங்களின் குண்டுவீச்சில் மூழ்கியது. 5,000 பேர் வரையில் இதில் கொல்லப்பட்டனர்.

1983 – ஐக்கிய அமெரிக்காவின் செனட் கட்டடத்தில் குண்டு வெடித்தது.

1991 – மேஜிக் ஜான்சன் தாம் எச்.ஐ.வி. நுண்மத்தை பெற்றுள்ளதாக அறிவித்து என். பி. ஏ.-இல் இருந்து வெளியேறினார்.

1996 – நைஜீரிய விமானம் ஒன்று லாகோஸ் அருகே வீழ்ந்ததில் 143 பேர் கொல்லப்பட்டனர்.

2002 – அமெரிக்கப் பொருட்களின் விளம்பரங்களை அறிவிக்க ஈரான் தடை செய்தது.

பிறப்புகள்

1858 – பிபின் சந்திர பால், இந்திய செயல்திறனாளர் (இ. 1932)

1867 – மேரி க்யூரி போலந்து மற்றும் பிரஞ்சு வேதியியல் அறிஞர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1934)

1876 – சார்லி டவுன்சென்ட், ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர் (இ. 1958)

1879 – லியோன் ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியாளர், (இ. 1940).

1888 – சி. வி. இராமன், இந்திய இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர், (இ. 1970).

1913 – அல்பேர்ட் காம்யு – நோபல் பரிசு பெற்ற பிரஞ்சு எழுத்தாளர், (இ. 1960).

1929 – எரிக் காண்டல், நோபல் பரிசு பெற்ற ஆத்திரிய மருத்துவர்

1954 – கமல்ஹாசன், தமிழ் நடிகர்.

1959 – சீனிவாஷ், பாடகர்

1969 – நந்திதா தாஸ், இந்திய நடிகர்.

1975 – வெங்கட் பிரபு, இந்தியத் திரைப்பட இயக்குநர்

1980 – கார்த்திக், பாடகர்

1980 – ஜேம்ஸ் பிராங்கிளின், நியூசிலாந்துத் துடுப்பாட்ட வீரர்

1981 – அனுஷ்கா ஷெட்டி, இந்திய நடிகை

இறப்புகள்

1862 – பகதுர்ஷா ஜஃபர், பேரரசர், விடுதலைப் போராட்ட வீரர்

1913 – ஆல்ஃவிரடு அரசல் வாலேசு, ஆங்கில உயிரியலாளர் (பி. 1823)

1962 – எலினோர் ரூசுவெல்ட், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1884)

1993 – திருமுருக கிருபானந்த வாரியார், ஆன்மீகவாதி, (பி. 1906).

2000 – சி. சுப்பிரமணியம், இந்திய அரசியல்வாதி, (பி. 1910).

2011 – ஜோ பிரேசியர், அமெரிக்கக் குத்துச்சண்டை வீரர் (பி. 1944)