2வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டதா? கோவையில் பரபரப்பு

கோவை

கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது குழந்தைக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றிய தாக குழந்தையின் பெற்றோர்கள் புகார் கூறிய நிலையில், அதற்கு அரசு மருத்துவ மனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவமன வளாகம் பரபரப்பாக காணப்படுகிறது.

கோவையில் அரசு பொதுமருத்துவமனையில், திருப்பூரில் வேலை செய்து வரும் திருச்சியை சேர்ந்த கூலித்தொழிலாளிகளான விஸ்வநாதன் சித்ரா தம்பதியின ரின் இரட்டை குழந்தைகளில் ஒரு குழந்தை உடல்நலம் இல்லாததால்,  கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவை அரசு மருத்துவமனையில்  சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த குழந்தைக்கு ரத்தம் ஏற்றப் பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் தற்போது குழந்தையின் உடல்நிலை பாதிக்கப் பட்டதை தொடர்ந்து கடந்த 7-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில்  அனுமதித்து உள்ளனர்.

குழந்தையின் ரத்த பரிசோதனையின்போது, எச்ஐவி தொற்று இருப்பது தெரிய வந்ததாகவும்,  இங்கு ரத்தம் ஏற்றிச் சென்ற பிறகுதான் குழந்தையின் உடலில் கொப்புளங்கள் ஏற்பட்டன. இதையடுத்து, ரத்த மாதிரியை பரிசோதித் ததில் குழந்தைக்கு எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது என்று புகார் கூறிய தம்பதியினர், தங்கள் இருவருக்கும் எச்ஐவி பாதிப்பு கிடையாது, அதுபோல மற்றொரு குழந்தைக்கும் எச்ஐவி பாதிப்பு இல்லை என்றும் தெரிவித்தனர்.

இந்த பிரச்சினை பூதாகாரமாக வெடித்ததை தொடர்ந்து, கோவை அரசு மருத்துவ மனை டீன் அசோகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, பாதிக்கப்பட்டுள்ள குழந்தை பிறந்தபோது வெறும்  700 கிராம் மட்டுமே இருந்துள்ளது. மேலும், இருதயத்தில் ஓட்டை மற்றும் மூளை வளர்ச்சி குறைவும் இருந்துள்ளது. இங்கு சிகிச்சைக்கு அழைத்துவரும் முன்பு அவர்கள் வேறு மருத்துவ மனையில் குழந்தையை சிகிச்சைக் காக அனுமதித்துள்ளனர்.

ஆனால், இங்கு ஏற்றப்பட்ட ரத்தத்தில் எச்ஐவி பாதிப்பு கிடையாது. ஹீமோகுளோ பின் அளவு குறைவாக இருந்ததால் அந்த குழந்தைக்கு ரத்த அணுக்கள் ஏற்றப்பட்டன. ரத்த அணுக்கள் 100 மி.லி. பாக்கெட்டில்தான் வரும். குழந்தைக்கு எவ்வளவு தேவையோ அந்த அளவு மட்டுமே ரத்த அணுக்கள் செலுத்தப்படும். அதன் அடிப்படையில் 50 மி.லி. மட்டுமே செலுத்தப்பட்டது.

மேலும், ரத்த அணுக்கள் மூலமாக எச்ஐவி பரவாது. இங்கு எந்த ரத்தம் ஏற்றப்பட்டாலும், அதை முறையாக எச்ஐவி பரிசோதனைக்கு உட்படுத்தி, எந்த தொற்றும் இல்லை என தெரிந்த பிறகே கோவை அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்ற அனுமதிக்கப்படுகிறது.

மேலும், அந்த குழந்தைக்கு ஒன்றரை வயது ஆன பிறகுதான் பாதிப்பு இருப்பது தெரியும். கோவை அரசு மருத்துவமனை மூலமாக எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

சமீபத்தில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு எச்ஐவி ரத்தம் ஏற்பட்ட நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கோவையில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

You may have missed