Random image

ஹெச்.ஐ.வி.ரத்தத்தை மாற்றி செலுத்தியதாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண் புகார்!

சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. ரத்தம் மாற்றி ஏற்றப்பட்டதாக பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. மாற்றி ரத்தம் ஏற்றப்பட்டதற்கு காரணமாக இருந்த மருத்துவர்கள், ஊழியர்கள், செலிவியர்கள் மற்றும் ரத்த வங்கி பணியாளரளின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hiv

சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றபோது, அங்கு கவனக்குறைவால் ஹெச்.சி.வி. பாதித்த ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது. சில நாட்களிலேயே அந்த கர்ப்பிணி பெண்ணிற்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அந்த பெண்ணிற்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. கர்ப்பிணி பெண்ணிற்கு அரசு மருத்துவமனையில் ஹெச்.ஐ.வி. பாதித்த ரத்தும் ஏற்றப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் எதிரொலியாக, முதற்கட்டமாக விருதுநகர் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் உள்ள ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்த பின்னரே ரத்த விநியோகம் தொடங்கும் என சுகாதார இணை இயக்குநர் மனோகரன் ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணும், அவரது கணவரும் சாத்தூரில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அலட்சியமாக செயல்பட்ட மருத்துவமனை ஊழியர்கள், ரத்த வங்கி பணியாளர்கள், மருத்துவர்கள் என அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு அந்த பெண் காவல் ஆய்வாளரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து செய்தியாளார்களை சந்தித்த பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர், “ ஒரு தவறும் செய்யாத எங்களது இந்த நிலைக்கு அரசே காராணம். பாதிக்கபப்ட்ட எனது மனைவிக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் “ என கூறினார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், “ ஹெச்.ஐ.வி. பாதிக்கபப்ட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் உரிய சிகிச்சை அளிக்கப்படும் “ என தெரிவித்தார்.