Random image

ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் அதிகரிக்கும் : சுப்ரமணியசுவாமி

ரின சேர்க்கை குற்றமில்லை என 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு  தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்று வரும் நிலையில், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இத்தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இறுதியானது கிடையாது. அடுத்து அமையும் அரசு ஏழுபேர் கொண்ட அரசியல்சாசன அமர்விடம் இந்த வழக்கை எடுத்து செல்லும்.

ஓரின சேர்க்கை குற்றமில்லை என்ற தீர்ப்பினால், சமூகத்தில் இனிமேல் குற்றங்கள் அதிகரிக்கும். பாலுறவு மூலம் பரவும் நோய்கள் அதிகரிக்கும்.

ஓரின சேர்க்கை என்பது என்னைப் பொறுத்தவரை மரபணு ரீதியிலான ஒரு குறைபாடாகும். இதுபோன்ற பாதிப்பை கொண்டவர்களை இயல்பான பாலுறவு வைத்துக்கொள்ளும் மனிதர்களுடன் ஒப்பிடுவது தவறு.

இது இந்திய கலாச்சாரம் கிடையாது. அமெரிக்க கலாச்சாரமாகும்.

இந்த விவகாரத்துக்குப் பின்னால் கோடிக்கணக்கான பணம் புழங்குகிறது. அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் ஓரின சேர்க்கை பார்களை உருவாக்க நினைக்கின்றன. இதனால் நாட்டின் பாரம்பரியம் சீரழியும். நாட்டின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும். இது இந்துத்துவ கொள்கைக்கு எதிரானது, நம்முடைய பழங்கால முறைக்கும், பழக்கத்துக்கும் எதிரானது.

மேலும் ஓரினச்சேர்க்கையால் எய்ட்ஸ் நோய் பெருகும்’ என சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்