உத்தரவின்றி பள்ளிக்கு விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
கிருஷ்ணகிரி
அதிகாரிகள் உத்தரவின்றி பள்ளிக்கு தானே விடுமுறை அளித்த தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகா உள்ளது. இந்த தாலுகாவில் உள்ள ஒரு ஊர் நூருந்து சாமி மலை ஆகும். இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளஹ்டு. அந்த பள்ளியில் தலைமை ஆசிரியராக கிருஷ்ணமூர்த்தி என்பவர் பணி புரிந்து வருகிறார்.
கடந்த 14 ஆம் தேதி இவர் அதிகாரிகளின் உத்தரவு இன்றி தாமாகவே முடிவு செய்து பள்ளிக்கு விடுமுறை அளித்துள்ளார். இது குறித்து தேன்கனிக்கோட்டை கல்வி அலுவலர் சேகரிடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகார் அடிப்படையில் சேகர் விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு சேகர் பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையை ஏற்ற மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை பணியிடை நீக்கம் செய்துள்ளார்.