பாகிஸ்தான் ஹாக்கி அணி ஹீரோ மன்சூர் அகமது மறைவு

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ஹாக்கி அணி முன்னாள் கோல் கீப்பர் மன்சூர் அகமது இன்று உடல் நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார்.

49 வயதான அவர் பாகிஸ்தான் அணி உலக கோப்பையை வென்ற போது இவர் கோல்கீப்பராக விளையாடினார். இவர் அணியின் கேப்டனாகவும் செயல்பட்டார். உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வெல்ல முக்கிய பங்காற்றியவர். பாகிஸ்தான் ஹாக்கி அணியில் ஹீரோ என்று அழைக்கப்பட்டவர்.

இதய நோயால் பாதிக்கப்பட்ட மன்சூர் அகமது கராச்சி மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். அங்கு இன்று அவர் இறந்தார்.