உலகக்கோப்பை ஹாக்கி: 13வது அணியாக பாகிஸ்தான் பங்கேற்பு

ஒடிசா:

ந்த ஆண்டு உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் கடந்த முறை பங்குபெறாத பாகிஸ்தான் அணி இந்த முறை 13வது அணியாக களமிறங்க உள்ளது.

உலக கோப்பை ஹாக்கி தொடருக்கான டைட்டில் சாங்… எழுத்தாளா் குல்சார் பாடல் வரிகளை எழுத, அதற்கு  ஏ.ஆா்.ரகுமான் இசை அமைத்து பாட  உள்ளாா்.

இந்த ஆண்டு (2018)  நடைபெறவுள்ள 14-வது உலக கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நவம்பர் 28-ந் தேதி முதல் டிசம்பர் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.  இந்த தொடரில் இந்தியா உள்பட 16 அணிகள் கலந்து கொள்கின்றன.

கடந்த (2014) உலக கோப்பை ஹாக்கி போட்டிக்கு தகுதி பெறாத 4 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணி, இந்த ஆண்டு நடைபெற உள்ள போட்டியில்  இருப்பதால் உலக கோப்பை போட்டி மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்து இருக்கிறது.

லண்டனில் நடைபெற்ற  உலக ஹாக்கி லீக் அரை இறுதி சுற்றில் பாகிஸ்தான் அணி  7-வது இடம் பிடித்ததுடன், ஐரோப்பிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள் அந்த அணிக்கு சாதகமாக  அமைந்தாலும் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தாணி  13-வது அணியாக  தகுதி பெற்றது.

பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக நெதர்லாந்து, ஆஸ்திரேலியா அணிகள் 3 முறை உலக கோப்பையை  தட்டிச் சென்றுள்ளன.

இந்திய அணி ஒரே ஒரு முறை (1975-ம் ஆண்டு) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Hocky world cup odissa 2018, Pakistan hockey team also participation, உலகக்கோப்பை ஹாக்கி: 13வது அணியாக பாகிஸ்தான் பங்கேற்பு
-=-