சென்னை:
ழக்கறிஞர்கள்  சட்ட திருத்தத்தை ரத்து செய்யக்கோரி கடந்த 2 மாதமாக  போராட்டம் நடைபெற்று வருகிறது
நேற்றைய ஐகோர்ட்டு முற்றுகை  போராட்டத்தால் சென்னையில் பயங்கர வாகன நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இது மக்களிடையே ஆதங்கத்தை ஏற்படுத்தியது.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்
தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல்

இதையடுத்து வழக்கறிஞர்களுக்கான புதிய சட்ட திருத்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக, சென்னை கோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் அறிவித்துள்ளார்.
வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி வந்ததை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்ட திருத்தத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என வலியுறுத்தி காசிராமலிங்கம் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக, கோர்ட்களில் கேமராக்கள் பொருத்த வேண்டும் என காசிராயன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது, தலைமை கவுல் கூறுகையில், புதிய சட்ட திருத்தத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படாது என தெரிவித்தும் வழக்கறிஞர்கள் போராட்டத்தை தொடர்வது ஏன்? வழக்கறிஞர்களுக்கு ஆங்கிலம் புரியவில்லையா?
சட்ட திருத்தத்தை திரும்ப பெற வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்துவதாக தெரியவில்லை. வழக்கறிஞர்களின் போராட்டம் தேவையற்றது. நீதிபதிகள் குழுவிடம் கருத்து தெரிவிக்குமாறு கூறிய பிறகும் வழக்கறிஞர் சங்கங்கள் முன்வரவில்லை. வழக்கறிஞர்களின் போராட்டத்தை ஏற்க முடியாது. விதிக்குழுவிடம் முறையிடாமல், போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது. சரியான நபர்களின் வழிகாட்டுதல் இல்லாததால் போராட்டம் தொடர்கிறது. சரியாக வழிநடத்துபவர்கள் வழக்கறிஞர்கள் குழுவில் இல்லை என்றார். இந்த வழக்கு குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.