உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும்போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஸ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று தெரிந்துக் கொள்வோம்.

நீங்கள் அவசியமாய் உடனிருக்க வேண்டும் என விரும்புபவர்களுக்குரிய நேரத்தை ஒதுக்குங்கள்.

எனது தாயார் உடல்நலிவடைந்து தனது கடைசிக்கட்ட காலத்தைப் படுக்கையில் கழித்தபோது, எனது குடும்பத்தார் அனைவரும் வேலைக்கு விடுமுறை எடுத்து அவர் அருகிலேயே இருந்தோம். அப்ப்போது அவருக்குச் சிகிச்சை செய்வதற்காக ஒரு செவிலியர் இரு நாட்களுக்கு ஒருமுறை வந்து எங்களுடன் இருந்தார். நாங்கள் பெற்ற வரமாய், அந்த்த் செவிலியர் தன் முகன் சுழிக்காமல் என் தாய்க்கு அனைத்து கடினமான பணிவிடைகளும் செய்தார். எங்கள் தாயின் மரணத்தை எப்படி எதிகொள்ளப் போகின்றீர்கள். உங்கள் அடுத்தக் கட்ட நடவடிக்கை என்ன போன்று எங்களுடன் தொடர்ந்து உரையாடி வந்தார். இறைவனைச் சேரும் என் தாயின் எதிர்பார்ப்புகள் என்னவென்று எங்களுக்குத் தெரியாது. ஆனால், அவருடன் நாங்கள் அருகிலேயே இருக்க வேண்டுமென்பதில் உறுதியாய் இருந்தோம்.

எங்கள் தாயை இயற்கை அழைத்துக் கொண்ட பிறகும் கூட, எங்களுக்கு ஆறுதலாகவும், அரவணைப்பாகவும் இருந்தார். தாய் இறந்தபோது, உங்கள் தாயுடன் எவ்வளவு நேரம் இருக்க விரும்பிகின்றீர்களோ, செலவிட்டுக்கொள்ளுங்கள். அதன்பிறகு தகனம் செய்வோருக்கு தகவல் சொன்னால் போதும் என எங்களைத் தேற்றுவதில் முக்கியப் பங்காற்றினார். அப்போது எங்கலுக்கு அவரது சேவையின் பங்கு என்ன என்பது எங்களுக்குப் புரிய வில்லை.

பின்னாளில், அந்தச் செவிலித்தாய் எங்களுக்கு வழிகாட்டியாகவும், நலன்விரும்பியாகவும்,, நல்ல தோழியாகவும் மாறிப் போனார். அந்தச் செவிலித்தாய் செய்ததை ஆங்கிலத்தில், “ஹோல்டிங்க் ஸ்பேஸ் ( holding space)” என அழைப்பர். தமிழில் நாம் அதனை, “துக்க வடிகாலை இருப்பவர்கள், அன்பால் அரவணைப்பவர்களை இந்தக் கட்டுரையில் “ஆறுதல் தோழமை” என அழைப்போம்.

“ஆறுதல் தோழமை” என்பதன் பொருள் என்ன?

அதாவது, ஒருவரைப் பற்றி எந்த விமர்சனமும் வைக்காமல், அவரைத் திருத்த முயற்சிக்காமல், அவரது முடிவுகளை மாற்ற முயற்சிக்காமல், அவருடன் நாம் நீண்ட பயணத்திற்கு தயாராகிவிட்டோம் என்பதாகும்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம், நாம் யாருக்கு ஆறுதலாய் இருக்கின்றோமோ, அவர் வேறொருவருக்கு ஆறுதலாய் இருப்பார். இது ஒரு சங்கிலியாய்த் தொடரும்.
மேலும், நமக்கு ஒரு ஆறுதல் தோழமை இல்லாமல், நம்மால் ஒருவருக்கு ஆறுதல் தோழமையாய் இருக்க முடியாது. மேலே கொடுக்கப்பட்ட சம்பவத்தில், இறக்கும் தாய்க்கு மகன்களும், அந்த மகன்களுக்குச் செவிலித்தாயும் ஆறுதலாய் இருந்துள்ளது கண்கூடு. அந்தச் செவிலித்தாய்க்கு அவரது குடும்பத்தில் ஒருவரோ அவரது தோழி ஒருவரோ ஆறுதலாய் இருந்திருக்கக்கூடும்.

மனமொருமித்த கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருக்கும் வாய்ப்பு அதிகம்.

ஒவ்வொருவருக்கும் தாம் மனக்குழப்பத்தில் இருக்கும்போது , தாம் இவரால் பின்னர் விமர்சிக்கப்படுவோம் அல்லது பாதிக்கப்படுவோம் எனும் அச்சமின்றி, ஒருவரிடம் தன் பலவீனத்தை மறைக்காமல் மனம் விட்டுப் பேச ஒரு ஆறுதல் தோழமை அவசியமாகின்றது.

மாபெரும் தலைவர்கள், பயிற்சியாளர்கள், புகழ்பெற்ற நடிகர்கள், நர்ஸ்கள் வரை அனைவருக்கும் ஒரு ஆறுதல் தோழமை தேவைப்படுகின்றது.

அப்படித் தான் ஜெயலலிதாவிற்கும் ஆறுதலாய் ஒரு சசிகலா தேவைப்பட்டார். அதனால் தான் அவரைத் தமது “உடன்பிறவாச் சகோதரி என்று தமக்குச் சமமாய் தந்து வீட்டில் நடத்தினார் (கட்சியில் அல்ல).

இந்தியாவில் 18யில் இருந்து 64 வயதிற்குட்பட்ட இந்தியர்களில் 22 சதவிகிதத்தினர் தங்களின் உடல்நிலை குறித்தான கவலையாக “ கவலை எனும் மனச்சோர்வைத்தான் குறிப்பிடுகின்றனர். இந்தச் சதவிகிதம், இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட வியாதிகளைவிட அதிகமாகும். குறிப்பாய், இந்த எண்ணிக்கை பெண்களைப் பொருத்தவரை மிக அதிகமாகக் காணப்படுகின்றது. இந்தியப் பெண்களில், சோர்வு தான் தங்களின் உடல்நலன் குறித்த முக்கியக் கவலையென 25% பெண்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போது வாழ்க்கை சூழல், வாழும் முறை, உடை கலாசாரம், உணவுக் கலாசாரம், போட்டி மனப்பான்மை, மனநெருக்கடி போன்ற அனைத்தும் பணி புரிவோருக்கு மனச்சோர்வை ஏற்படுத்துகின்றன. மனச்சோர்வினால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை, மிக அதிகமாகவுள்ளது. உறவுகளில் விரிசல், துரோகங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் ஆகியவை மனிதர்களுக்குத் துக்கத்தை ஏற்படுத்தும் சில காரணிகள் ஆகும்.

நாம் ஒவ்வொருவரும், ஒர் ஆசிரியராக, அனுசரணையாளராக, பயிற்சியாளராக, அம்மாவாக, அப்பாவாக, மனைவியாக, கணவனாக, நண்பனாக நம்மால் முடிந்தவரை, அதுத்தவருக்கு “ஆறுதல் தோழமையாக ” இருக்க முயற்சிக்க வேண்டும்.

ஆறுதல் தோழமையாய் இருப்பது எளிதான வேலையல்ல.
ஏனெனில், உலகத்திலேயே மிகவும் எளிதானது “அறிவுரை” கூறுவது தான்.
பெரும்பாலும், நாம், மற்றவர் பிரச்சனைக்கு வலிந்து ஒரு ஆலோசனையைக் கொடுத்து, அதனை உடனடியாகப் பின்பற்றவேண்டி அழுத்தம் கொடுப்போம்.
அவர்கள் நாம் காட்டும் வழியினைப் பின்பற்றவில்லை என்றால் விலகி விடுவோம். இது ஒரு இயல்பான மனித போக்கு . ஆனால், நாம் சிரத்தை எடுத்தோமேயானால், நம்மால், பல மனிதர்களுக்கு ஒரு ஆறுதல் தோழமையாக இருந்து அவர்கள் தங்களின் துக்கத்திலிருந்து மீள வைக்க முடியும்.

உண்மையில், ஒருவரின் வாழ்வில் சொந்த வளர்ச்சி, மாற்றம், துக்கம், முதலியனவற்றில் ஆதரவாய் இருப்பது அவசியம். அதே வேளையில், அவ்வாறு ஆறுதல் தோழமையாய் இருக்கின்றேன் எனும் பெயரில், அவரது சுதந்திரத்தைப் பறிப்பது, அவமானப்படுத்துவது , அளவுக்கதிகமாய் அறிவுரை வழங்குவது எனத் திணறடிக்கக் கூடாது.

அவர்கள் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவை வழங்கி, மென்மையான வழிகாட்டல் கொடுத்து, அவர்கள் தவறு செய்தாலும் கூட அவர்கள் நமிடம் பாதுகாப்பாக உணரத் தயாராக இருக்க வேண்டும்.
இத்தகைய ஆறுதல் தோழமையாய் நாம், நமது குழந்தைகள், குடும்பத்தினர் நண்பர்கள் மட்டுமின்றி, பயணத்தின்போது நம்மிடம் பேச்சுக் கொடுக்கும் அந்நியர்களைடமும், அவர்கள் துக்கத்தைப் பகிர்ந்துக் கொள்ள தோள் கொடுக்க முன்வர வேண்டும்.

சிறந்த அரவணைப்பாளர்கள் பின்பற்றும் “சில” வழிமுறைகள்:

ஒருவர் தன் சுயபுரிதலையும், ஞானத்தையும் நம்ப நாம் இடமளிக்க வேண்டும்.
ஒருவரால் கையாள முடியுமளவிற்கு மட்டுமே தகவல் கொடுங்கள்
ஒருவரின் முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தட்டிப் பறிக்க வேண்டாம்.
உங்களின் சொந்த ஈகோவை தூர வையுங்கள்.

தோற்பதில் தவறில்லை என்பதை கற்றுக்கொடுங்கள்.
உதவும்போது பணிவு மற்றும் நற்சிந்தனைகளை வெளிப்படுத்துங்கள்.
சிக்கலான உணர்வுகள், பயம், அதிர்ச்சி, முதலியனவற்றை கொட்டித்தீர்க்க ஒரு வடிகாலை உருவாக்குங்கள் நீங்கள் எடுத்திடாத புதிய முடிவுகளை ஒருவர் எடுக்கவும் புதிய அனுபவத்தைப் பெற அனுமதியுங்கள்.

ஆறுதல் தோழமையாய் இருப்பது ஒரு கலை. அதில் ஒரே இரவில் நிபுணர் ஆகிவிட முடியாது என்பதை நாம் உணர வேண்டும். மேலும், ஒரு போதுமான வழிமுறைக் குறிப்புகள் பட்டியலைக் கொடுத்து விடவும் முடியாது. சித்திரமும் கைப்பழக்கமும் என்பது போல், நாம் தொடர்ந்து எடுக்கும் பயிற்சிமூலம் நமக்குள் உருவாகிறது. மொத்தத்தில் இது ஒரு சிக்கலான நடைமுறை, மற்றும் அது ஒவ்வொரு நபர் மற்றும் ஒவ்வொரு நிலைமைக்கும் ஏற்ப மாறும் தன்மையுடையது என்பஹ்டை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.