டில்லி:

நாடு முழுவதும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு 500 சிறப்பு ரெயில்களை இயக்குவதாக இந்திய ரெயில்வே அறிவித்து உள்ளது.

வரும் மார்ச் 2 ந்தேதி ஹோலி பண்டிகை வட மாநிலங்களில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இருந்து 500 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாக ரெயில்வே அறிவித்து உள்ளது.

டெல்லி, மேற்குவங்கம், ஜார்க்கண்ட், பீகார், குஜராத், உத்தரப்பிரதேசம் போன்ற வட மாநிலங்களில் ஹோலிப் பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மற்ற மாநிலங்களில் வசித்து வரும் வடமாநிலத்தவர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில், சென்னை உள்பட அனைத்து மாநில ரெயில் நிலையங்களிலும்  மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

இந்நிலையில், மக்கள் கூட்டம் நெரிசலை குறைக்கும் வகையில்  500 சிறப்பு ரெயில்களை இயக்க இருப்பதாக ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுவதாகவும், அதுகுறித்த விவரம் இணைதளங்களில் வெளியிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.