புதுக்கோட்டை, நாகையில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் மற்றும் நாகை மாவட்டத்தின் சில பகுதிகளில் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதுமே கஜா புயலால் கடும் பாதிப்பு அடைந்துள்ளது. நிவாரணப் பணிகள் தொடரும் போதிலும் நிலைமை இன்னும் முழுமையாக சீரடையவில்லை.

இதனால் அம்மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நாகை மாவட்ட ஆட்சியர் நாளை புயலால் பதிக்கப்பட்டுள்ள நாகப்பட்டினம் வருவாய் கோட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் மட்டும் விடுமுறை அளித்துள்ளார்.

மயிலாடுதுறை கோட்டத்தில் பாதிப்புக்களை பொருத்து அந்தந்த பள்ளிகளில் தலைமை ஆசிரியர் விடுமுறி குறித்து முடிவெடுக்கலாம் எனவும் நாகை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.