ஜூலை 31 வரை விடுமுறை நீட்டிப்பு – அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய 5-ம் கட்ட ஊரடங்கு இன்றுடன் நிறைவடைகிறது.

இதையடுத்து, தமிழகத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு ஜூலை 31 -ம் தேதி வரை விடுமுறை நீட்டிப்பு எனவும் அதுவரை தேர்வுகளும் நடைபெறாது என்றும் ஆன்லைன் வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.