பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: பிளஸ் 2 மாணவர்களுக்கு  இன்றுடன் செய்முறை தேர்வு முடிவடைந்துள்ளதால், நாளை முதல் விடுமுறை விடப்படுவதாக  பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தீவிரம் காரணமாக,   பத்தாம் வகுப்பு உள்பட அனைத்து வகுப்புகளுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பிளஸ்2 தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், செய்முறை தேர்வு அறிவிக்கப்பட்ட படி நடைபெற்றது.

இந்த நிலையில் பிளஸ்2 மாணவர்களுக்கு ஏப்ரல் 16ஆம் தேதி தொடங்கி  நடைபெற்று வந்த செய்முறை தேர்வு  இன்று (ஏப்ரல் 23ந்தேதி) மாலையுடன் முடிவடைந்தது.  இதையடுத்து நாளை முதல், பன்னிரண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு பள்ளிகள் விடுமுறை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து உள்ளது. மேலும், 12 வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் போது 15 நாட்களுக்கு முன்னர் பள்ளிகள் திறக்கப்பட்டும், அப்போது ஹால்டிக்கெட் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.