எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு 31ந்தேதி வரை விடுமுறை! தமிழகஅரசு

சென்னை:

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு வரும் 31ந்தேதி வரை விடுமுறை விடப்படுவதாக அறிவித்து உள்ளது.

மேலும், கேரள எல்லையில் உள்ள 5 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் எல்கேஜி முதல் 5ம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது,.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில்  கொரானா அச்சுறுத்தல் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் மழலையர் பள்ளிகளுக்கு விடுமுறை மற்றும்,
கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.