மிலாது நபி தினத்தை முன்னிட்டு மதுக்கடைகளுக்கு விடுமுறை: சென்னை கலெக்டர் அறிவிப்பு

மிலாது நபி தினத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி சென்னையில் உள்ள மதுபான கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் கீதாலட்சுமி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “மிலாது நபி தினத்தை முன்னிட்டு நவம்பர் 10ம் தேதி மதுபான சில்லறை விற்பனை கடை, பார் கிளப்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் எவ்வித மதுபானங்களும் விற்பனை செய்யப்பட மாட்டாது. அனைத்து மதுபான கடைகளும், பார்கள் மற்றும் கிளப்களும் மூடப்பட வேண்டும். உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.