இளையராஜா இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசித்து அசத்திய ஹாலந்து புண்ணியவதி!

நெட்டிசன்:

கே.பண்பரசு, இளையராஜா இசைப்பாசளை முகநூல் பதிவு

வர்ஜினியா நிக்கலோய் நின்கி !

இந்த ஹாலந்து (ஹொலண்ட்)  நாட்டு வெள்ளைப் பெண்மணி நின்கி, இளையராஜாவின் இசைக்குழுவில் எண்பதுகளில் இசை இயற்கையாய் இருந்த காலத்தில் இதயம் வரை இறங்கி இசை தந்த இளையராஜாவின் ரெக்கொர்டிங்கில் கிட்டதட்ட மிகப் பிரபலமான இருபது பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தவர்.

வெஸ்டர்ன் கிளாசிகல் முறையில் புல்லாங்குழல், வெஸ்டர்ன் கிளாசிகல் சிம்பொனி இசை, வெஸ்டர்ன் கிளாசிகல் பியானோ படித்த மேதையான நிங்கி ,இந்திய இசையில் மயங்கி இந்தியா வந்தவர்.

தமிழ் நாட்டை சுற்றிப் பார்த்து இளையராஜாவின் புல்லாங்குழல் தமிழ் சினிமா பாடல்களில் அதிசயிக்க வைத்தது கண்டு அவரிடம் போய் அவரின் இசை அமைப்பில் வாசிக்க வேண்டும் என்று கேட்டு இருக்கிறார்.

அந்த நேரத்தில் சுதாகர் என்பவரும்,பின் நாட்களின் அருண்மொழி என்ற நெப்போலியன் செல்வராஜ், ராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல் வாசிதவர்கள் இருந்தும், இளையராஜா நின்கிக்கும் பல பாடல்கள் வாசிக்க கொடுத்தார்.  அதில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் வரும்  புத்தம் புது காலை வரும் பாடல், மூன்றாம் பிறை  படத்தில் சுதாகருடன் சேர்ந்து பூங்காற்று என்ற பாடலும் வேறு பல பாடல்களுக்கும் வாசித்து இருக்கின்றார்.

ஜானி படத்தில ஆசைய காதில தூதுவிட்டு பாடலில் வாசித்து இருக்கிறார். ராஜாவின் ஆஸ்தான புல்லாங்குழல் ஆர்டிஸ்ட்களில் ஒருவரான முதல் மரியாதை புகழ் சுதாகர் பல வெஸ்டர்ன் டெக்னிக்குகள் அவரிடம் இருந்து கற்றதாகவும், அந்த நின்கி என்ற female classical flutist வெள்ளைக்கார அம்மணிக்கு எப்பவுமே நான் நன்றியுடை யவன் என்றும் ஒரு TV பேட்டியில் சொன்னார் .

நின்கி one of the top 10 Flutists at that time என்ற லெவலில் தமிழ் கலாசார அடையாள வாத்தியமான புல்லாங்குழ லில் தமிழ்நாட்டில் கலக்கி இருக்குறார். நின்கி மிகவும் திறமை சாலி , பாடல் இசை அமைத்து, ரெகார்டிங் தொடங்கமுன் ,மற்ற இசைக்கலைஞர்கள் இளையராஜா எழுதிக்கொடுத்த  நோட்ஸ்களை வைத்து இசை அமைப்பில் நேரம் எடுத்து ஒத்திகை செய்து கொண்டு இருந்தபோது, நின்கி அவரோட புல்லாங்குழல் ஸ்கோர் நோட்ஸ்ஐ இளையராஜாவுக்கு உனேயே, அழுத்தம் திருத்தமாக, வாசித்துக் காட்டிவிட்டு,ஒரு ஓரமாக இருந்து ஆங்கில நாவல் வாசிப்பார்.

நின்கி ஹொலண்ட் நாட்டுகாரகளுக்கே உரிய மெலிந்த தோற்றம் உடைய, உயரமான பெண்மணி, மசால் தோசை, சட்னி சாம்பாருடன் விரும்பி சாப்பிடுவார் , இந்திய தமிழ் கலாசாரப்படியே இளையராஜாவின் ரெக்கார்டிங் ஸ்டுடியோவுக்கு சேலை கட்டி, சாந்துப் போட்டு வைத்து கொண்டுதான் வருவார். நின்கிதான் போன பிறப்பில இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும் என்று, இளையராஜாவின் இசைக்குழுவில் வாசித்த இசைகலைஞர்களிடம் சொல்லி சிரிப்பாராம்.

சுருக்கமாக சொன்னால், நின்கி ராஜாவின் இசைக்குழுவில் புல்லாங்குழல்வாசித்த புண்ணியவதி.