ஹாலிவுட்டின் பழம்பெரும் நடிகரான கிர்க் டக்ளஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது 103.

கிர்க் டக்ளஸுக்கு 1996ஆம் ஆண்டு வாழ்நாள் சாதனைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.

கடந்த சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டக்ளஸ் நேற்று (05.02.2020) கலிபோர்னியாவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.

கிர்க் டக்ளஸ் மரணத்துக்கு ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1946ஆம் ஆண்டு ’தி ஸ்ட்ரேஞ் லவ் ஆஃப் மார்த்தா இவர்ஸ்’ படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய கிர்க் டக்ளஸ் இதுவரை 90க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.