வாஷிங்டன்:

அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு எதிராக நடிகர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உலக திரையுலகினரின் ஒரே ஆதர்ஷ கனவான ஆஸ்கர் விருதுகள் இன்னும் சிலமணி நேரத்தில் அறிவிக்கப்படவுள்ளன.

ஆண்டுதோறும் விருதுக்கு முதல்நாள் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் திரையுலகினருக்காக விருந்து நிகழ்ச்சி நடைபெறும்.  இந்தாண்டு அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.

ஆனால் அதே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ட்ரம்பின் குடியேற்ற கொள்கைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப்போராட்டத்தில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்களான மைக்கேல் பாக்ஸ், ஜோடிபோஸ்டர், வில்மர் வால்டெர்ரமா உள்பட 500–க்கும் மேற்பட்ட ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.

அப்போது நடந்த நிகழ்ச்சியில் சர்வதேச அகதிகள் குழுவின் தலைவர் டேவிட் மிலிபேண்ட் பங்கேற்று உரையாற்றினார்.