Random image

துப்பாக்கி வைத்துக் கொண்டு மிரட்டியதால் ஹாலிவுட் நடிகை போலீசாரால் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ஹாலிவுட் நடிகை வனேஸா மார்கியூ துப்பாக்கி வைத்துக் கொண்டு மிரட்டியதால், வேறு வழியின்றி தற்காப்பபுக்காக போலீசார் அவரை சுட்டுக் கொன்றனர். மனநோயால் பாதிக்கப்பட்ட வவேஸா மார்கியுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் சென்ற போது, அவர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளார்.

gun-shot

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தின் சவுத் பாஸதேனா நகரில் வசித்து வந்தவர் ஹாலிவுட் நடிகை வனேஸா மார்க்கியூ. இவர் அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் இஆர் எனும் தொடரில் நடித்துப் புகழ்பெற்ற நிலையில் திரைப்படங்களிலும் நடித்து வந்தார்.

சமீபகாலமாக வனேஸா மார்க்யூ ஒருவிதமான மனநோயால் பாதிக்கப்பட்டு வந்ததால் சிகிச்சை எடுத்து வந்தார். கடந்த வெள்ளிக்கிழமை தனது வீட்டில் வனேஸா மார்க்யூ மிகுந்த ஆவேசமாகக் காணப்பட்டுள்ளார். இது குறித்து அறிந்த வீட்டின் உரிமையாளர் போலீஸாருக்கும், மருத்துவக்குழுவிற்கும் தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மார்க்யூவிற்கு கவுன்ஸ்லிங் அளித்தனர். ஆனால், அவர் சற்றும் எதிர்ப்பார்க்க முடியாத போது மருத்துவக் குழுவையும், போலீஸாரையும் நெருங்கவிடாமல் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக மார்க்யூ மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதனால், வேறுவழியின்றி தற்காப்புக்காக மார்க்யூவை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதன்பின்பு தான் தெரிய வந்தது மார்க்யூ கையில் இருந்தது பொம்மை துப்பாக்கி என்று. இதையடுத்து உடனடியாக மார்க்யூவை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து மார்க்யூவின் தோழி டெரன்ஸ் டோவல்ஸ் கூறுகையில், ” மார்க்யூ கடந்த சில மாதங்களாகவே மனஉளைச்சல், பணப்பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் சிகிச்சையும் எடுத்துவந்தார். ஆனால், ஆஸ்கார் விருது வாங்க வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் காணப்பட்டார். ஆனால், அவர் ஒருபோதும் துப்பாக்கியை எடுத்து மற்றவர்களை மிரட்டும் அளவுக்கு துணிச்சலானவர் இல்லை. இது தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்த வேண்டு” எனத் தெரிவித்தார்.

உயிரிழந்த மார்க்யூ சீவர் லெட்டர்ஸ், கியூபன் எம்பஸி உள்ளிட்ட தொடர்களிலும், பிளட் இன் பிளட் அவுட், ட்வென்டி பக்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் புகழ்பெற்ற தொடரான இஆர், வெண்டி கோல்மென், ஸ்டான்ட் அன்ட் டெலிவர் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.