பாலியல் புகாரில் சிக்கிய ஹாலிவுட் தயாரிப்பாளர் போலீசில் சரண்

வாஷிங்டன்:

பாலியல் புகாரில் ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டைன் சரணடைந்தார்.

பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது பல நடிகைகள் பாலியல் புகார் தெரிவித்துள்ளனர். பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகைகள் ஏஞ்சலினா ஜூலி, க்வினெத் பேல்ட்ரோ, ரோஸ் மெக்குவான், சல்மா ஹாயாக் உள்பட 60 நடிகைகள் புகார் தெரிவித்தனர்.

கேன்ஸ் திரைப்பட விழாவில் பேசிய இத்தாலி நடிகை ஆசியா அர்ஜெண்டாவும் புகார் தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து விசாரணை நடந்தது. ஹார்வி எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற தகவல் வெளியானது. இதையடுத்து ஹார்வே வெயின்ஸ்டீன் நியூயார்க் போலீசில் இன்று சரணடைந்தார்.

கார்ட்டூன் கேலரி