ஹாலிவுட் நடிகையின் ரகசிய வாழ்க்கை.. தலைமறைவாக சந்திக்கும் மாஜி கணவர்..

மைட்டி ஹார்ட், மிஸ்டர் அண்ட் மிஸர்ஸ், குங்பூ ஃபாண்டா, வான்டட் சால்ட் உள்ளிட்ட பல்வேறு ஹாலிவுட் படங்களில் நடித்திருப்பவர் ஏஞ்சலினா ஜூலி. இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் பிரட் பிட்டை மணந்தார். இவர்களுக்கு 6 குழந்தைகள் உள்ளனர். 12 வருடம் இணைந்து வாழ்ந்து வந்த இந்த ஜோடி கடந்த ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தது.


இந்நிலையில் இருவரும் குடும்பம் தொடர்பான மன சிகிச்சை எடுத்துக் கொண்டனர். இதையடுத்து மீண்டும் இணைந்து வாழ்வதுபற்றி ஆலோசித்து வருகின்றனர். ஆனாலும் இவர்களுக் கிடையே அடிக்கடி ரகசிய சந்திப்பு நடப்பதாக அமெரிக்க இதழ்களில் தகவல் கசிகிறது.
கடந்த 2 வாரத்தில் பிராட் பிட் ஏஞ்சலினா வீட்டுக்கு இரண்டுமுறை வந்து சென்றாராம் அதேபோல் இரண்டு தினங்களுக்கு முன் தனது மோட்டார் சைக்கிளை ஓட்டியபடி ஏஞ்சலினா வீட்டுக்கு பிராட் பிட் ரகசி விசிட் அடித்திருக்கிறார். குழந்தைகளின் பிறந்த நாளில் அவர் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதை அவரை கண்காணித்து வரும் சில புகைப்படக் கார்கள் படம் எடுத்து வெளியிட்டுள் ளனர்.
ஏஞ்சலினாவின் முதல்கணவர் ஜானி லீ மில்லெர் 1996 ம் ஆண்டு மணந்தவர் கருத்து வேறுபாடு காரணமாக 3 வருடத்தில் விவாகரத்து செய்தார். அடுத்து பில்லி பாப் தாமஸ் என்பவரை மணந்து அவரையும் 3 வருடத்தில் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

You may have missed