கோலிவுட்டில் பிஸியான ஹாலிவுட் தமிழர்!

--

வின் சீதாராமன் (Nawin Seetharaman) கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்காவில் புலம் பெயர்ந்து வாழும் ஒரு தமிழர்.

இவர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் பிரபல நட்சத்திரங்களான ஹாரிசன் ஃபோர்டு, டாம் குருஸ், ஜான் ஷே, டைலர் பெர்ரி, டிம் மெக்ரா, டியானா டெய்லர் போன்றவர்கள் நடித்த திரைப்படங்கள், இசை ஆல்பங்கள், டெலி சீரியஸ் போன்றவற்றில் பணி புரிந்துள்ளார்.

ஆனாலும், நடிப்பில் ஆர்வம் மிகுதி என்பதால், தன் குடும்த்தை அமெரிக்காவிலேயே விட்டுவிட்டு, நடிப்பதற்காகவே தற்போது சென்னையில் தங்கி பல்வேறு தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “பீச்சாங்கை” திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த டாக்டர் கதாபாத்திரம் வெகுவாகப் பாராட்டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை சுமார் இருபத்தைந்திற்கும் மேற்பட்ட தமிழ் உட்பட தென்னிந்தியத் திரைப்படங்களில் நடித்துள்ளார். வெளிவந்த தமிழ் திரைப்படங்கள் பீச்சாங்கை, கத்திச்சண்டை, சௌகார்பேட்டை, சும்மாவே ஆடுவோம், தொட்டால் தொடரும், வேல்முருகன் போர்வெல்ஸ், தம்பி வெட்டோத்தி சுந்தரம். கன்னடத்தில் பிராணா கொடுவெ கிளத்தி, சின்னதா குடி, சிடிலு போன்ற படங்களில் முதன்மை வில்லனாக நடித்துள்ளார்.

மேலும், பல தமிழ் படங்களில் முன்னணி கதாநாயகர்கள் மற்றும் நகைச்சுவை நடிகர்களோடு இணைந்து முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் சில படங்களில் முதன்மை துணை இயக்குநராகவும், இணை இயக்குநராகவும் பணி புரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், பல்வேறு வெளிநாடுகளில் இவருக்குள்ள நெருங்கிய தொடர்புகளால் படப்பிடிப்பு மற்றும் இசை வெளியீடு போன்றவைகளை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து தருகிறார் என்பது கூடுதல் செய்தி. சமீபத்தில் பொட்டு திரைப்படத்தின் இசை வெளியீட்டை மலேசியா – கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தித் தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.