ஸ்ரீதேவிக்கு அமெரிக்க ஆஸ்கார் விழாவில் அஞ்சலி !

லாஸ் ஏஞ்சல்ஸ்

ன்று நடக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் மறைந்த கலைஞர்கள் வரிசையில் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

நடிகை ஸ்ரீதேவி உறவினர் திருமணத்துக்கு துபாய் சென்றபோது ஓட்டல் அறையில் உயிரிழந்தார்.   மருத்துவப் பரிசோதனையில் அவர் குளியல் தொட்டியில் தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்ததாக சொல்லப்பட்டது.   மும்பையில அரசு மரியாதையுடன் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று 90  ஆவது ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.   இந்த விழாவில் மறைந்த கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.   அப்போது நடிகை ஸ்ரீதேவி மற்றும் மறைந்த பழம்பெரும் இந்தி நடிகர் சசிகபூர் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.