வீடு தேடி வரும் டீசல்: இந்தியன் ஆயில் ‘டோர் டெலிவரி’

சென்னை:

வாடிக்கையாளர்களுக்கு டீசலை வீட்டிற்கு கொண்டு வந்து டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் தொடங்கி உள்ளது.

அதன்படி  குறைந்தபட்சம் 200 லிட்டர் மற்றும் அதற்கு மேல் டீசல் தேவைப்படு வோர் அதற்குரிய மொபைல் செயலி மூலம் ஆர்டர் செய்தால், டீசல் உங்கள் வீட்டின் வாசலுக்கே வந்துவிடும்.

பெரும் நிறுவன வாடிக்கையாளர்கள் மற்றும் பண முதலைகளை கணக்கில் கொண்டு இந்திய ஆயில் நிறுவனம் இந்த புதிய விற்பனை முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.

இதற்காக REPOSE APP  என்ற மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த செயலி மூலம், வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான  டீசலை ஆர்டர் செய்யலாம்; அவர்களுக்கு டீசல் எந்தவித கூடுதல் கட்டணமுமின்றி டெலிவரி செய்யப்படும் என்று அறிவித்து உள்ளது.

இதற்காக டீசல் டேங்கர் லாரியில், டிஸ்பென்சர் பொருத்தப்பட்ட பிரத்யேக வாகனம் வீதிகளில் வலம் வரும். தற்போது  புனேயில் முதலில் அறிமுகமாகியுள்ள இந்தச் சேவை, விரைவில் பிற மாநிலங்களிலும்  விரிவுபடுத்தப்பட உள்ளது.