வீடு இல்லாதவர்களுக்கு, வீடு!: குடியரசு தலைவர் பட்ஜெட் உரை

பட்ஜெட்டுக்கான பாராளுமன்றக் கூட்டத்தொடர் இன்று துவங்கியது.  அப்போது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பேசியதில் இருந்து:

“1.2 கோடி வாடிக்கையாளர்கள் சமையல் எரிவாயு மானியம் வேண்டாம் என தானாக முன்வந்து தெரிவித்துள்ளனர்.

ஊழல் மற்றும் கறுப்பு பணத்திற்கு எதிராக  அமைதி புரட்சி நடந்துவருகிறது.

1.4 லட்சம் கிராம மக்கள் பொது இடத்தை கழிப்பறையாக பயன்படுத்துவதை நிறுத்தி, கழிப்பறையை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

11,000 கிராமங்களுக்கு மின்சார வசதி வழங்கப்பட்டுள்ளது.

வீடு இல்லாதவர்களுக்கு, வீடு வழங்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது.”