டில்லி

ங்கிகள் வழங்கும் வீட்டுக் கடனுக்கான வட்டிக்குறைவு வாடிக்கையாளர்களுக்கு  உடனடியாக மாற்றப்பட உள்ளது.

வீட்டுக் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்கும் வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து நிதி உதவி பெற்று கடன்களை வழங்கி வருகின்றன.    ரிசர்வ் வங்கி இந்த வங்கிகளுக்கு  வழங்கும் ரெப்போ வட்டி விகிதம் பொறுத்து கடன் வட்டிகளும் மாறுதல் அடைய வேண்டும்.   ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை அதிகரிக்கும் போது இந்த வங்கிக் கடன் வட்டி விகிதங்கள் உடனடியாக அதிகரிக்கின்றன.  ஆனால் வட்டி விகிதம் குறையும் போது உடனடியாக வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவதில்லை

வங்கிகள் தாங்கள் வழங்கும் கடன்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் அதிக வட்டியை வசூலித்து வருகின்றன.   சமீபத்தில் ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்த ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது  அதில் வங்கிகள் வழங்கும் வீட்டு வசதி,  வாகனம், மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கான கடன்களுக்கு வட்டி குறித்து மூன்று காரணிகளை அறிவித்து அதில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.

அதில் முதலாவது ரிசர்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதம், இரண்டாவது மூன்று அல்லது ஆறுமாத கருவூல வருமானம், மூன்றாவதாக இந்திய நிதி ஆணையம் அறிவிக்கும் வட்டி விகிதம் ஆகியவை ஆகும்.   இவ்வாறு ரெப்போ வட்டி விகிதத்தைப் பின்பற்றும் முதல் வங்கி ஸ்டேட் வங்கி ஆகும்.   இந்த  வரிசையில் ஐடிபிஐ வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, யூனியன் வங்கி, மற்றும் அலகாபாத் வங்கிகள் ஏற்கனவே உள்ளன.

அத்துடன் வங்கியின் சுற்றறிக்கையின் படி மூன்றில் எதைப் பின்பற்றும் போதும் ரிசர்வ் வங்கி அளிக்கும் ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது அந்த குறைப்பை வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.   எனவே இனி ரெப்போ வட்டி விகிதம் குறையும் போது அந்த வட்டி விகிதக் குறைப்பை வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் உடனடியாக வழங்க வேண்டியது அவசியம் ஆகி உள்ளது.