வீட்டுக்கடனுக்கான வட்டி இந்தியாவில் அதிகம்- ஆய்வில் தகவல்

டில்லி,

இந்தியாவில்  வீட்டுக் கடனுக்கான வட்டிவீதம் அதிகம் என்பதால் சொந்த வீடு கட்டவேண்டும் என நினைப்பவர்களின் கனவு நிறைவேறாமல் போய்விடுகிறது.

வீட்டுக்கடன் பெற்றவர்களிடத்திலும், அதற்காக விண்ணப்பித்தவர்களிடத்திலும்  India Mortgage Guarantee Corporation என்ற தனியார் நிறுவனம் ஓர் ஆய்வு நடத்தியது.

மாநகரங்கள், நகரங்கள், சிறிய நகரங்களில் நடத்தபட்ட இந்த ஆய்வில் 4100 நபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் அனைவரும் 25 முதல் 34 வயது, 35 முதல் 44 வயது, 45 முதல் 55 வயது என மூன்று பிரிவினராக பிரிக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதில்

சிறிய நகரங்களில் வசிக்கும் 25 முதல் 44 வயது வரை உள்ள இளைஞர்கள்  சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என விரும்புகிறார்கள். இதுதொடர்பாக தேசிய வீட்டுவசதி வங்கியின் நிர்வாக இயக்குநர் ஶ்ரீராம் கல்யாண்ராம்  செய்தியாளர்களிடம் பேசியபோது,   2022 ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு  திட்டத்தின்கீழ்    அனைவரும் எளிதாக வீடு கிடைக்கும் வகையில் வீட்டுவசதி துறை வளர்ச்சிப் பெற்றுள்ளதாக கூறினார். இதற்காக தனியார் நிறுவனங்களும்  சிறப்பான திட்டங்களை தொடங்க விருப்பதாக  அவர்  தெரிவித்தார்.

இதற்கான முழு தகவல்களும் கிடைத்த உடன் அனைவருக்கும் வீடு திட்டத்தை 2022 ம் ஆண்டுக்குள் நிறைவேற்ற முடியும் என தான் நம்புவதாகவும் கல்யாண்ராம்  கூறினார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் காரணமாக மனைகளின் விலை கணிசமாக குறைந்து விட்டதால் 15 லட்சம் ரூபாயிலிருந்து 29 லட்சம் ரூபாய் வரை வீடுகள் கிடைக்கும் என்றும் கல்யாண்ராம்  கூறினார்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published.