மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து…!

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் சென்னை வருகை ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 14ம் தேதி சென்னைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்க  சென்னை வருவதாக இருந்தது. அப்போது அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்தும் அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்தக்கூடும் என்றும் கூறப்பட்டது.

நடிகர் ரஜினியையும் சந்தித்து அவரது உடல்நலம் பற்றி விசாரிக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் தகவல் வெளியாகின. இந்நிலையில் அமித் ஷா  சென்னை வருகை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நவம்பர் மாதம் அவர் சென்னை வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.