உள்துறை அமைச்சர் அமித்ஷா 3வது முறையாக மீண்டும் மருத்துவமனையில் அனுமதி…

டெல்லி: உள்துறை அமைச்சர் அமித்ஷா மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நள்ளிரவில்ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக, அவர்  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்ட்டுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட   உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் (ஆகஸ்டு) 2ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சுமார் ஒரு வார காலம் சிகிச்சை பெற்றவர், நோய் குணமடைந்து வீடு திரும்பினார்.

இதையடுத்து, மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.  இதன் காரணமாக மீண்டும்,  ஆகஸ்டு 18ம் தேதி  2வதுமுறையாக டெல்லி  எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 12 நாட்கள் சிகிச்சைக்குப் பின் வீடு திரும்பினார்

இந்த நிலையில் 3வதுமுறையாக நள்ளிரவு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.  அமித்ஷாவிற்கு நேற்றிரவு 11 மணியளவில் திடீரென சுவாசக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ரன்தீப் குலேரியா தலைமையிலான மருத்துவக் குழு சிகிச்சையளித்து வருகிறது.