தீர்ப்பு எதிரொலி: தேசிய பாதுகாப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் அமித்ஷா ஆலோசனை

டெல்லி:

யோத்தி வழக்கில் உச்சநீதி மன்றம் இன்று காலை தீர்ப்பு வழங்கும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் பாதுகாப்பு குறித்து உயர்அதிகாரிகளுடன் இன்று காலை தனது வீட்டில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில் உச்சநீதி மன்றம் காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கும் என அறிவித்து உள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

குறிப்பாக அயோத்தி அமைந்துள்ள உ.பி. மாநிலத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது,. இந்த நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது இல்லத்தில் உயர்மட்ட பாதுகாப்புக் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தி வருகிறர்.

இந்த கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (என்எஸ்ஏ) அஜித் டோவல், புலனாய்வு பணியகத்தின் (ஐபி) தலைவர் அரவிந்த்குமார் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இதில், பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து  பாஜக தலைமை அலுவலகத்துக்கு வரும் அமித் ஷா கட்சித் தலைவர்களுடன் கட்சியின் நிலைப்பாடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்.