ராஜ்நாத் சிங் 21ம் தேதி மங்கோலியா பயணம்

டில்லி:

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வரும் 21-ம் தேதி மங்லோலியா நாட்டுக்கு பயணம் மேற்கொள்கிறார். 24-ம் தேதி வரை அங்கு தங்குகிறார்.

அப்போது இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தவுள்ள எண்ணை சுத்திகரிப்பு ஆலை பணிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்கிறார்.

மங்கோலிய தலைநகர் உல்லன்பாட்டர் நகரில் அந்நாட்டின் அதிபர், பிரதமர், துணை பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசிக்கவுள்ளார்.