கஜா பாதிப்பு: மத்தியக்குழு இன்று புதுக்கோட்டையில் ஆய்வு

சென்னை:

ஜா பயலின் கோர தாண்டவத்துக்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட மத்திய அரசு அனுப்பி உள்ள  மத்திய  உள்துறை இணைச்செயலர் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக்குழுவினர் நேற்று  மாலை சென்னை வந்தனர்.

இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதை தொடர்ந்து உடனடியாக பட்டுக்கோட்டையில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வு செய்ய விரைகின்றனர்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ள கஜா புயல் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் 22ந்தேதி டில்லியில் பிரதமரை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், உடனடி நிவாரணமாக  முதல் கட்டமாக ரூ.1500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், புயல் சேதங்களை மத்திய குழுவினர் உடனே வந்துபார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கஜா புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு நேற்று மாலை சென்னை வந்துள்ளது. இன்று தலைமை செயலகத்தில் முதல்வர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்திய பிறகு புயல் சேதங்களை ஆய்வு செய்ய உள்ளது. விமானம் மூலம் திருச்சி செல்கின்றனர். அங்கு கார் மூலம், முதலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆய்வை மேற்கொள்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவினர் புயல் பாதித்த மாவட்டங்களைப்  3 நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்ய உள்ளனர்.