கஜா பாதிப்பு: உள்துறை இணைச்செயலர் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக்குழு இன்று சென்னை வருகை

--

சென்னை:

ஜா பயலின் கோர தாண்டவத்துக்கு பாதிப்புக்குள்ளான பகுதிகளை பார்வையிட மத்திய  உள்துறை இணைச்செயலர் ரிச்சர்ட் தலைமையில் மத்தியக்குழுவினர் இன்று மாலை சென்னை வருவதாக வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்திச் சென்றுள்ள கஜா புயல் வரலாறு காணாத சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் நேற்று டில்லியில் பிரதமரை சந்தித்து பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,  கஜா புயல் நிவாரணமாக 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், உடனடி நிவாரணமாக  முதல் கட்டமாக ரூ.1500 கோடி ரூபாய் ஒதுக்க வேண்டும் என்றும், புயல் சேதங்களை மத்திய குழுவினர் உடனே வந்துபார்க்க வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் கஜா புயல் சேதங்களை ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று மாலை வருவதாக அறிவிக்கப்பட்டு உள்து.

இந்த குழுவினர் புயல் பாதித்த மாவட்டங்களைப்  3 நாட்கள் பார்வையிட்டு ஆய்வு செய்யும் என வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் தெரிவித்துஉள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சக நீதித்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட், நிதியமைச்சகம் மற்றும் செலவினத்துறை ஆலோசகர், ஆர்.பி. கவுல், வேளாண்துறை, விவசாயிகள் நலக் கூட்டுறவுத்துறை பொறுப்பு இயக்குநர் ஸ்ரீவத்சவா, ஊரக வளர்ச்சித்துறை துணை செயலாளர் மாணிக் சந்திர பண்டிட், எரிசக்திதுறை அமைச்சக தலைமைப் பொறியாளர் வந்தனா சிங்கல் ஆகிய 5 பேர் கொண்ட தமிழக வருகின்றனர்.

சென்னையில் உள்ள, நீர்வளத்துறை அமைச்சக  இயக்குனர் ஹர்ஷா, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சக மேற்பார்வைப் பொறியாளர் இளவரசன் ஆகியோரும் இந்த ஆய்வில் பங்கேற்கின்றனர்.

இந்த குழுவினர்,  சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை ஆய்வு செய்ய இருப்பதாகவும், அதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தலைமை செயலகத்தில் இதுகுறித்து ஆலோசனை நடைபெற இருப்பதாகவும்,  வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால் கூறி உள்ளார்.

You may have missed