ஹோமியோபதி டாக்டர்களும் அலோபதி டாக்டராகலாம்! புதிய மசோதாவில் தகவல்

டில்லி:

ந்திய மருத்துவ முறைகளான   ஆயுர்வேதம், ஹோமியோபதி படிப்பை பயில்பவர்கள் அலோபதி மருத்துவர்கள் போல பணிபுரிய வசதி செய்யும் வகையில்  புதிய மசோதா ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தால்,  இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், அலோபதி மருத்துவ பார்ப்பதற்கான  தேர்வு எழுதி அலோபதி டாக்டராக செயல்படுவதற்கு உள்ள தடை அகலும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ கவுன்சிலை கலைத்து, அதற்கு பதிலாக  தேசிய மருத்துவ கமிஷன் அமைக்க வகை செய்யும் மசோதா கடந்த வாரம்  லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. அத்துடன்,  ஆயுர்வேதம், ஹோமியோபதி போன்ற இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், நவீன மருத்துவ முறையான, அலோபதி டாக்டர்களாவதற்கு வாய்ப்பு அளிப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய மருத்துவ கமிஷன், ஹோமியோபதிக்கான மத்திய கவுன்சில், இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சில் ஆகியவை ஆண்டுக்கு ஒரு முறை கூடி  இது குறித்து விவாதிக்க வேண்டும் எனவும்,    இந்திய மருத்துவ முறை டாக்டர்கள், அலோபதி டாக்டர்களாக செயல்படுவதற்கு தேர்வு நடத்துவது குறித்தும் இந்த அமைப்புகள் விவாதிக்க வேண்டும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது.