கொரோனாவும் ஓமியோபதியும்… Dr. கோ. பிரேமா MD(Hom),

லக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்று கூறப்பட்டாலும், மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான இயற்கை உணவுகளை நமது மூதாதையர்கள் ஏற்கனவே கண்டுபிடித்து கூறியிருக்கிறார்கள்…

அதுபோல, சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவ முறைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டும் பல்வேறு மருந்துகளும் நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால் அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் காரணமாக, பாரம்பரிய மருந்துகள் மறைக்கப்பட்டு வருகின்றன.

ஆனால், தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமான நிலையில், ஏராளமானோர், பாரம்பரிய மருத்துவ முறையை நாடி வருகிறார்கள்…இது ஒரு முன்னேற்றமே…

மத்திய ஆயுஷ் அமைச்சரவையின் ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவத்தில் கொரோனா காய்ச்சலுக்கான  தடுப்பு மற்றும் சிகிச்சை மருந்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு   கொரோனா தொற்றை குணப்படுத்தும் ஆற்றல் ஓமியோபதி மருத்துவத்துக்கும் உண்டு என்று தெரிவித்திருந்த நிலையில், அது அலோபதி மருத்துவத்தின் ஆதிக்கம் காரணமாக மறைக்கப்பட்டது. ஆனால், தற்போது, அது இந்திய மருத்துவத் துறையான ஆயுஷ் துறையில் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது…

காண்க லின்க்.

https://pib.gov.in/PressReleseDetailm.aspx?PRID=1600895

தற்போது, கொரோனா பீதியில் இருப்பவர்களுக்கு ஓமியோபதி மருத்துவம் கைகொடுத்து வருகிறது.

ஓமியோபதி தடுப்பு மருந்து விபரம்:

இந்த மருத்தை எடுத்துக்கொள்வது எப்படி என்பது குறித்து, பிரபல ஓமியோபதி மருத்துவர் கோ. பிரேமா (எம்.டி. ஓமியோபதி)  அவர்கள் விவரமாக தெரிவித்துள்ளார்…

Arsenicum Album 30c. ஒரு வேளைக்கு மூன்று மாத்திரைகள். (வெறும் வயிற்றில் காலையில் சாப்பிடுவது நலம்)
மூன்று நாட்களுக்கு ஒருவேளை வீதம் சாப்பிட்டால் பாதுகாப்பு கிட்டும்.

ஒரு டிராம் (சிறிய 5ml கொள்ளளவு குப்பியில் தருவர்) என்கிற அளவில் மாத்திரைகளாக வாங்கினால், 500மாத்திரைகள் (கடுகு அளவில் சிறிய உருண்டைகள்) இருக்கும்.

விலை அதிகபட்சம் ஒரு டிராம் ரூபாய்.20/ க்கு வாங்கிவிடலாம் . ஒரு குப்பி ஒரு குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் போதுமானது.

அனைத்து ஓமியோபதி மருந்து கடைகளில் கிடைக்கும்.  இதுதொடர்பாக உங்கள் பகுதியில் உள்ள  ஓமியோபதி மருத்துவர்களையும் ஆலோசிக்கலாம்.

பொதுவாகவே சீசனல் தொற்று மற்றும் புதிய தொற்று வகைகளுக்கு சிறந்த மருந்து இது.

கடந்த “10 வருடங்களாக” வந்துகொண்டிருக்கிற “புதிய புதிய” தொற்று நோய்களுக்கு மத்திய அரசின் முக்கிய ஆயுதமாக ஓமியோபதி விளங்கி வருகிறது. அதில் இம்மருந்து முக்கிய பங்களித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் இதில் விதிவிலக்கு என்பது மிகக்கேவலமான ஒரு அரசியல். (எளிய விலைகுறைவான நல்ல பயன்தரும் ஓமியோபதியை இங்கு அரசிடம் வலியுறுத்தவும் , அரசு திட்டங்களை மக்களிடம் சேர்க்கவும், மக்கள் நலனிலும் ஓமியோபதியிலும் விருப்பமுள்ள ஓமியோபதி சார் பணிகள் நடப்பதில்லை).

தற்போது பயமுறுத்தி வருவது,  பழைய சாதாரன வைரஸின் புதிய வகைதான் இது. இப்போது குறிப்பிட்ட இடத்தில் வீரியமாக தொற்றுகிறது. இது பல்கிப்பெருகும்போதும் மற்ற சூழலில் பரவும்போதும் விரைவில் அதன் வீரியத்தை இழக்கும். இதுவே இயற்கை அல்லது அறிவியல். அதிகபட்சம் ஓரிரு மாதங்களில் காணாமல் போய்விடும்.

அதனால் தயவுசெய்து பீதியை கிளப்பாமல் அச்சத்தை பரப்பாமல் இருப்போம்.

-திருஞானம்