Random image

‘தன்பாலின உறவு’ காட்டு மிராண்டித்தனமானது: துரைமுருகன் காட்டம்

நெல்லை:

ன்பாலின உறவு காட்டு மிராண்டித்தனமானது என்று திமுக பொருளாளர்  துரைமுருகன் காட்டமாக கூறினார்.

திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்திய துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆண் ஆணுடனும், பெண் பெணுடனும் திருமணம் செய்து கொள்வது காட்டு மிராண்டித்தனமானது என கூறினார்.

சமீபத்தில் உச்சநீதி மன்றம் தன்பாலின உறவு குற்றமில்லை என்று கூறி  சட்டப்பிரிவு 377-ஐ ரத்து செய்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், மற்றொரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் திமுக பொருளாளர் துரைமுருகன் திருநெல்வேலியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுகையில், ஆணுக்கும் ஆணுக்கும், பெண்ணுக்கும் பெண்ணுக்கும் திருமணம் செய்வது காட்டுமிராண்டித்தனம் என்றும்,  இதற்கு சட்டமும் ஒரு சிலரும் துணைபோகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

மேலும், மதத்திற்கு மதம் திருமணம் செய்து கொள்ளும் முறை மாறுபட்டாலும், ஆணும் பெண்ணும் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கூறினார்.

முன்னதாக நேற்று இரவு தென்காசியில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய துரைமுருகன்,  இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்டாலின் உள்ளார். ஸ்டாலின் யாரை கைகாட்டுகிறாரோ அவர் தான் அடுத்த பிரதமர்” என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.