ஓரினச் சேர்க்கை தீர்ப்பு….அரைகுறை மனதுடன் ஆர்எஸ்எஸ் ஏற்பு
டில்லி:
ஒரினச் சேர்க்கை குற்றமல்ல என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக் கொள்வதாக ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. எனினும் இதில் ஆர்எஸ்எஸ் திருப்தி அடையவில்லை என்பதை காட்டுகிறது.
ஒரினச் சேர்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு அமர்வு இன்று தீர்ப்பளித்தது. இந்த உத்தரவை ஏற்றுக் கொள்வதாக பாஜக தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ் கருத்து தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆர்எஸ்எஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,‘‘உச்சநீதிமன்றம் கூறியது போல் ஒரினச் சேர்க்கையை நாங்களும் குற்றமாக கருதவில்லை. எனினும் ஒரே இன திருமணம் என்பது இயற்கைக்கு எதிரானது.
அதனால் இத்தகைய உறவுகளுக்கு நாங்கள் ஆதரவு அளிப்பது கிடையாது. இந்த சமூகத்திலும் இது போன்ற உறவுகளை ஆதரக்கும் பாரம்பரியம் இல்லை. மனித இனம் எப்போதும் அனுபவம் மூலமே கற்றுக் கொள்ளும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.