புதுடெல்லி:

தன்பாலின சேர்க்கை மற்றும் விபச்சாரத்தை ராணுவம் ஒருபோதும் ஏற்காது என்று ராணுவ தளபதி ஜெனரல் பிப்பின் ராவத் தெரிவித்துள்ளார்.


புதுடெல்லியில் நடந்த வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பில் ராணுவ தளபதி ஜெனரல் பிப்பின் ராவத் கூறியதாவது;
நாட்டின் சட்டதிட்டத்தை விட ராணுவம் உயர்ந்ததல்ல. மக்களுக்கு பொருந்தக் கூடிய அனைத்து சட்டங்களும் ராணுவத்துக்கும் பொருந்தும்.

தன்பாலின சேர்க்கை குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் தீர்பளித்தாலும், ராணுவத்தில் தன்பாலின சேர்க்கையையோ, விபச்சாரத்தையோ அனுமதிப்பதில்லை. ராணுவச் சட்டத்தின் 46&வது பிரிவின் கீழ், தன்பாலின, விபச்சாரம் போன்ற இயற்கை நியதிக்கு எதிராக நடப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.

ஏராளமான வீரர்கள் தங்கள் குடும்பத்தைப் பிரிந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மட்டும் குடும்பத்தினரை தங்களோடு அழைத்து வந்து வைத்துக் கொள்கிறார்கள்.

எல்லையில் இருக்கும் வீரர், தங்கள் குடும்பத்தைப் பற்றி எண்ணுவது இல்லை. அவர்கள் நன்றாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையோடு அவர் பணியாற்றுவார்.

ராணுவத்தினர் கட்டுக்கோப்பானவர்கள். நவநாகரீகமோ மேற்கத்திய கலாச்சாரமோ அவர்களிடம் இல்லை. மக்களுக்கு எதிராக எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும்.

ஆனால் ராணுவத்தில் இதை நாங்கள் அனுமதிப்பதில்லை. அவ்வாறு அனுமதித்தால், சூழ்நிலை சிக்கலாகிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.